×

மண்டபம் பகுதியில் கடற்பாசி வளர்ப்பது குறித்த பயிற்சி முகாம்

மண்டபம், பிப். 3: மண்டபம் கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர் குடும்பங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடற்பாசி வளர்ப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மண்டபம் பேரூராட்சி முனைக்காடு கடற்கரை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண்கள் பலரும் கடற்பாசி வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் சர்வம் நிதி உள்ளடக்கிய தனியார் அறக்கட்டளை சார்பில், இங்குள்ள மீனவர் குடும்பங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடற்பாசி வளர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் கடற்பாசி வளர்ப்பு திட்ட மேலாளர் ஜெய்பிரகாஷ் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து பயிற்சியாளர்கள் சகுந்தலா, சுகந்தி ஆகியோர் மீனவ பெண்களுக்கு கடற்பாசி வளர்ப்பு மற்றும் அவற்றை சந்தைபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கினர். மண்டபம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், அவர்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post மண்டபம் பகுதியில் கடற்பாசி வளர்ப்பது குறித்த பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Hall ,Mandapam District ,Dhunkadau.… ,Seaweed ,Cultivation ,Dinakaran ,
× RELATED சாலை ஓரத்தில் இடையூறு கருவேல மரங்கள் அகற்றம்